செய்திகள்

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி – வைரசின் பிடியில் பிரான்ஸ்

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் 11 லட்சத்து 88 ஆயிரத்து 159 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 64 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கடந்த சில வாரங்களாக இத்தாலியை புரட்டி எடுத்து வந்த வைரஸ் தற்போது பிரான்ஸ் நாட்டில் தீவிரமடைந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இதுவரை 89 ஆயிரத்து 953 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 66 ஆயிரத்து 955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 15 ஆயிரத்து 438 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்டுள்ளனர்.இந்நிலையில், பிரான்சில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 53 பேர் உயிரிழந்தனர். இதனால், அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 560 ஆக அதிகரித்துள்ளது.(15)