செய்திகள்

ஒஸ்ரின் பெர்னான்டோ உட்பட மூன்று அதிகாரிகள் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமனம்

1முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்ரின் பெர்னான்டோ உட்பட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றியவரும் அரச சேவையில் அனுபவங்களைக் கொண்டவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ,  பல வருடகாலம் அரச உயர் பதவிகளை வகித்த நிர்வாக அதிகாரியும் பல அமைச்சுக்களின் செயலாளராகக் கடமையாற்றியவருமான திலக் ரணவிராஜ, முன்னாள் ஜனாதிபதி சந்திகா குமாரதுங்கவின் செயலாளராகவும் கனடாவுக்கான உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றிய சிரேஷ்ட நிர்வாக அதிகாரியுமான டபிள்யூ.ஜே.எஸ்.கருணாரத்ன ஆகியோரே ஜனாதிபதியின் புதிய ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.