செய்திகள்

ஓடையில் இருந்து கைக்குண்டை மீட்ட பொலிஸார் (படங்கள்)

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை போக்கடமுல்ல மெதபத்தன ரவுன்பார என்ற பகுதியில் ஓடையிலிருந்து கைக்குண்டு ஒன்றினை பதுளை பொலிஸார் 18.05.2015 அன்று காலை 7 மணியளவில் மீட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பிரதேசத்தில் மாட்டுக்கு புற்கள் அறுக்க சென்ற நபர் ஒருவர் இதனை கண்டு 119 என்ற விசேட இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி இத்தகவலை வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து சம்பந்த இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று கைகுண்டை மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இக்கைக்குண்டு எவ்வாறு இப்பிரதேசத்திற்கு கொண்டு வரப்பட்டது என்பதினை அறிந்து கொள்ளும் வகையில் பதுளை பொலிஸார் மேலிதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

vlcsnap-2015-05-18-15h49m15s47