செய்திகள்

ஓபாமவின் வேண்டுகோளை ஏற்பதற்கு ஈரான் மறுப்பு

ஈரான் அடுத்த பத்து வருடங்களுக்கு தனது அணுவாயுத திட்டங்களை இடைநிறுத்தி வைக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா விடுத்த வேண்டுகோளை ஏற்பதற்கு ஈரான் மறுத்துள்ளது.
எனினும் தொடர்ந்தும் அமெரிக்காவுடன் அணுவாயுத திட்டங்கள் குறித்த பேச்சுக்களை மேற்கொள்ளப்போவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் அளவுக்கதிகமான, அர்த்தமற்ற வேண்டுகோள்களை ஏற்காது என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜவாத் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
ஓபாமாவின் நிலைப்பாட்டின் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, அச்சுறுத்தும் நோக்கை கொண்டவை என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பேச்சுக்கள் தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ரொய்ட்டரிற்கு அளித்த பேட்டியில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா ஈரான் ஆகக்குறைந்தது அடுத்த பத்து வருடங்களுக்காவது தனது அணுவாயுத திட்டங்களை கைவிடவேண்டு;ம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.