செய்திகள்

ஓபாமா, ரவுல்கஸ்ட்ரோ கைகுலுக்கிக்கொண்டனர்

பனாமாவில் ஆரம்பமாகியுள்ள இலத்தீன் அமரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஓபாமாவும், கியூபா ஜனாதிபதி ரவுல்கஸ்ட்ரோவும் கைகுலுக்கிக்கொண்டுள்ளனர்.
உச்சி மாநாட்டின் ஆரம்பத்தில் இரு தலைவர்களும் உரையாடுவதை காண்பிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இருவரும் கைகுலுக்கி சிறிது நேரம் உரையாடியதை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது ஓரு உத்தியோகப்பற்றற்ற சந்திப்பு இருவரும் குறிப்பிடத்தக்க விடயங்கள் குறித்து கலந்துரையாடவில்லை எனஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவரும் சனிக்கிழமை மீண்டும் சந்தித்து அரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவது குறித்து ஆராய்வார்கள்.