செய்திகள்

ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு அருகே தடம்புரண்ட பவுசர்! நாசமான மண்ணெண்ணை

ஓமந்தைச் சோதனைச் சாவடிக்கு அருகில் பவுஸர் ஒன்று தடம்புரண்டதில் அதில் எடுத்தவரப்பட்ட மண்ணெண்ணை மண்ணோடு மண்ணாகியது.

இந்த விபத்துச் சம்பவம் இன்று திங்கட்கிழமை பிற்பகர் 2.30 மணியளவில் இடம்பெற்றது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் கொண்டுவந்த பவுஸரே இவ்வாறு தடம்புரண்டது.

பவுஸரிலிருந்து மண்ணெண்ணை வெளியேறியதால் அருகில் இருந்தவர்கள் அவற்றை தாம் எடுத்துவந்த பாத்திரங்களில் அள்ளிச்சென்றதையும் அவதானிக்கமுடிந்தது.

சிலமணிநேரத்தின் பின்னர் கனரக வாகனத்தின் உதவியுடன் பவுஸர் வாகனம் மீட்கப்பட்டது.