செய்திகள்

ஓமந்தையில் சோதனைகள் தொடரும்

ஓமந்தை சோதனைசாவடி வழமைபோல இயங்கும் என தெரிவித்துள்ள இராணுவபேச்சாளர் காய்கறிகளையும்,பழவகைகளையும் கொண்டுசெல்லும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓமந்தையில் வழமையான சோதனைநடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என்றும் இராணுவபேச்சாளர் ஜயந்த ஜயவீர தெரிவித்துள்ளார்.
ஓமந்தை சோதனைசாவடியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்துள்ள அவர் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.