செய்திகள்

ஓமந்தை சோதனை சாவடியில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி

 வவுனியாவில் இயங்கி வந்த ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கைகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாக தெற்கில் இருந்து வடக்கிற்கும் வடக்கில் இருந்துதெற்கிற்கும் நுழைபவர்களை சோதனை செய்யும் இடமாக பொது மக்களின் காணிகளை சுவீகரித்து அமைக்கப்பட்டிருந்த ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனை நடவடிக்கைகள் நேற்று மதியத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இது வரை காலமும் இப்பகுதியில் புகைப்படம் எடுப்பதற்கோ செய்தி சேகரிக்கவோ அனுமதி வழங்கப்படாத நிலையில் செயலமர்வுக்கு கொழும்பு நோக்கி பயணித்த ஊடகவியலளார்கள் சிலர் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து கஞ்சா கொண்டு வந்தாக தடுத்து நிறுத்தப்பட்ட பல சம்பவங்களும் இடம்பெற்றிருந்தது.

O (1) O (3)