செய்திகள்

ஓருநாள் போட்டிகள் சுழற்பந்துவீச்சாளர்களை பலப்படுத்துகின்றன- இம்ரான் தாகிர்

இவ்வருட ஐபிஎல்லில் டெல்கிடார்டெவில்ஸ் அணிக்காக விளையாடவுள்ள தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிர் ஓரு நாள் போட்டிகள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கடினமானவையாக மாறிவருகின்ற போதிலும்,அவர்கள் தங்களை மேலும் சிறந்தபந்துவீச்சாளர்களாக மாற்றிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தையும் அவை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

2014 முதல் ஐ.பிஎல்லில் விளையாடி வரும் தாகிர் தனது அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருபதிற்கு இருபது மற்றும் ஓரு நாள் போட்டிகளில் பந்துவீச்சுவது சுழற்பந்துவீச்சாளர்களுக்கு கடினமானவிடயம், ஆனாலும் இருபதிற்கு இருபதிற்கு இருபது போட்டியில் அவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர்,ஓரு நாள் போட்டி அவர்களை சிறந்த பந்துவீச்சாளர்களாக மாற்றுகின்றது. தற்கால போட்டிகள் முன்னரை விட தற்போது எங்களை பலப்படுத்துவதற்கு உதவுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இருபதிற்கு இருபது போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் உங்களை அதிகம் அடித்தாடுவார்கள்,அதனால் உங்களுக்கு விக்கெட்களை வீழ்த்துவதற்கான வாய்ப்புகளும் அதிகம்,அதேவேளை சவால்களும் அதிகம், அதனை நாங்கள் விரும்புகின்றோம்,என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுழற்பந்துவீச்சு கலை இன்னமும் தொடர்கின்றது,டெஸ்ட் போட்டிகளில் நீங்கள் அதனை காணலாம்,அதேவேளை டெஸ்ட்போட்டிகளில் கூட நீங்கள் பழையபாணி சுழற்பந்துவீச்சாளராக இருக்க முடியாது, கிரிக்கெட்ட மாறிவிட்டது. முன்னர் மாதிரி பந்தை பிளைட் செய்தால் துடுப்பாட்ட வீரர்கள் தடுத்து ஆடப்போவதில்லை ,தற்போது அவர்கள் சிக்சருக்கு அடிக்கவே முயல்வார்கள்,ஆகவே நீங்கள் வீசுகின்ற வேகமும் முக்கியமானது, முன்னரை விட தற்போது பந்துவீசுவதே கடினமானது என நான் கருதுகிறேன்.

சுழற்பந்து வீச்சாளர் என்ற வகையில் உங்களிடம் பல்வேறு வகையான பந்துகள் இல்லாவிட்டால் நீங்கள் தாக்குபிடிக்க முடியாது,குறிப்பாக இந்தியாவில்,இந்திய வீரர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக விளையாடக்கூடியவர்கள், என அவர் தெரிவித்துள்ளார்