செய்திகள்

ஓர் இரவு படத்தில் பொலிஸாக நடிக்கிறார் கமல்

உத்தம வில்லன் படத்துக்குப் பிறகு பாபநாசம், விஸ்வரூபம் 2 ஆகிய இரு கமல் படங்கள் வெளிவரவுள்ளன. இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து விட்டன.

கமலிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராஜேஷ் இயக்கும் ’ஓர் இரவு’தான் கமலின் புதிய படம். இதில் போலீஸாக நடிக்கிறார் கமல். இதற்கும் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ்.

வேட்டையாடு விளையாடு படத்துக்குப் பிறகு கமல் போலீஸ் வேடத்தில் நடிப்பதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.