செய்திகள்

ஓவ் ஸ்பின்பந்துகளை வீச சுனில் நரைனுக்கு தடை

மேற்கிந்திய மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஓவ் ஸ்பின் பந்துகளை வீசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சில பந்துகளை விதிமுறைகளுக்கு மாறாக வீசியதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் மீது கள நடுவர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து அவரது பந்து வீச்சை ஆய்வு செய்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை சுனில் நரைன் ஓவ் ஸ்பின் பந்துகளை வீசுவதற்கு தடை விதித்துள்ளது.
இதனால் அவர் ஐபிஎல் போட்டியில் ஓவ் ஸ்பின் பந்து வீச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுனில் நரைனின் ஓவ்ஸ்பின் பந்து வீச்சானது பிசிசிஐ கிரிக்கெட் சட்டத்தின் 24.2 பிரிவின் கீழ் முரண்பட்டதாக உள்ளது. எனவே ஐபிஎல் உள்பட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை நடத்தும் அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் ஓவ் ஸ்பின் வீச தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும் நக்கிள் மற்றும் குவிக்கர் ஸ்டிரெய்ட் பந்து வீச்சை அவர் தொடரலாம்.

நரைன் மீண்டும் ஆப் ஸ்பின்னை தொடர்ந்தால் அவரது பந்தை நோபோல்ஆக நடுவர்கள் அறிவிப்பார்கள். மேலும் அவர் குறித்த அறிக்கையையும் நடுவர்கள் தர அறிவுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.