செய்திகள்

‘ஓ காதல் கண்மணி’ படம் ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ்

‘ராவணன்’, ‘கடல்’ என தொடர் தோல்விகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருக்கும் படம் ‘ஓ காதல் கண்மணி’.

இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாகவும், நித்யா மேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். துல்கர் சல்மான் நடிக்கும் இரண்டாவது படம் இது.

ஏற்கெனவே அவர் வாயை மூடி பேசவும் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். ஓ காதல் கண்மணி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.

‘அலைபாயுதே’ பாணியில் முழுக்க முழுக்க காதல் படமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடுகிறது.