செய்திகள்

ஓ காதல் கண்மணி வெற்றி: இயக்குனர் மணிரத்னத்தின் நன்றி கடிதம்

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘ஓ காதல் கண்மணி’.

தொடர் தோல்வியால் துவண்டு இருந்த மணிரத்னம் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார். இப்படம் வெளியான அனைத்து இடங்களில் இருந்து பாசிட்டிவ் ரிசல்ட் வந்து கொண்டிருப்பதால் துல்கார் சல்மான், நித்யாமேனன், மணிரத்னம் உள்பட படக்குழுவினர் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதனிடையே ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னம் அனைத்து ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

கடிதத்தில், “அன்பு மற்றும் வெறித்தனத்துடன் நீங்கள் வெளியிட்டுள்ள விமர்சனங்களுக்கு நன்றி. இத்தனை வருட எனது கலைப்பயணத்தில் நீங்களும் ஒரு அங்கமாக இருந்து வருகிறீர்கள்.

இனி வரும் காலங்களிலும் நீங்கள் தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.