செய்திகள்

கங்குலியுடன் மோதலை தவிர்க்கவே இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனைக் குழுவில் இடம் பெற மறுத்தாரா டிராவிட்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தால் கங்குலியுடன் மோதல் ஏற்படுமென்பதால் தான் டிராவிட் அக்குழுவில் இடம் பெறவில்லை என கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையினால் உருவாக்கப்பட்டுள்ள ஆஆலோசனைக் குழுவில் கிரிக்கெட் விளையாட்டின் சாதனையாளர்களான சச்சின் கங்குலி மற்றும் லஷ்மண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் சுவர் என அழைக்கப்படும் ராகுல் டிராவிட் அந்த குழுவில் இடம் பெறாதது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.

இது பற்றி கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை சேர்ந்த சில அதிகாரிகள் கூறும் போது “வேறு பல வேலைகள் இருப்பதாக கூறி ஆலோசனை குழுவில் இடம் பெற டிராவிட் மறுத்து விட்டார். ஆனால் இதற்கு முக்கிய காரணம் கங்குலியுடன் ஈகோ மோதல் ஏற்படுமென்பதால் தான்” என தெரிவித்துள்ளனர்.