செய்திகள்

கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆகிய பகுதிகளில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண் உட்பட இருவருக்கு எண்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத கால கட்டாயச்சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சி பகுதியில் கடந்த ஆண்டு கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆயர்படுத்தப்பட்ட நிலையில் நிலுவையில் இருந்த வழக்குடன் தொடர்புபட்ட பெண் குறித்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நிலையில் முப்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால கட்டாயச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த ஆண்டு கசிப்புடன் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் பத்து வருடங்களிற்கு ஒத்தி வைக்கப்பட்ட ஆறு மாத கால கட்டாயச்சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் கடந்த ஆண்டு ஆயர்படுத்தப்பட்ட மேற்படி பெண் உட்பட இருவரையும் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து மேற்படி தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளும் விதிக்கப்பட்டன.
n10