செய்திகள்

கசிப்பு அருந்தியவர் கைது

யாழ்.ஏழாலைப் பகுதியில் வாழைத் தோட்டத்திற்குள் மறைந்திருந்து கசிப்பு அருந்திய நபரொருவரை நேற்று முன்தினம் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதானவரிடமிருந்து 180 மில்லி லீற்றர் கொள்ளளவுடைய போத்தல் கசிப்பையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைதானவர் அதே பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் எனத் தெரிய வருகிறது.