செய்திகள்

கச்சதீவுக்கருகில் இந்திய மீனவர்கள் கைதாகவில்லை: கடற்படை மறுப்பு

கச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் 5 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகளை இலங்கை கடற்படையினர் மறுத்துள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் இந்திக தெரிவித்தார். இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 14 பேர் மட்டுமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது எனினும் 5 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து ள்ளன. இதில் உண்மை கிடையாது என்றும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார். கச்சத்தீவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் குறித்த ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.