செய்திகள்

கச்சத்தீவை மீட்பது தான் மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வாம்!

கச்சத்தீவை மீட்பது தான் நீடித்து வரும் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்று ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து ராமேஸ்வரத்தில் மீனவ பிரதிநிதிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக மீனவர்களை மிரட்டும் வகையில் பேசி வரும் இலங்கை தலைவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கை அரசு சிறைப்பிடித்துள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கச்சத்தீவை மீட்பது தான் நீடித்து வரும் மீனவர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்றும், எதிர்வரும் 10ஆம் திகதி திருவோடு ஏந்தி பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.