செய்திகள்

கஞ்சாவுடன் ஒருவர் கைது

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மத்திய பிரிவு தோட்டத்தில் வீடு ஒன்றில் இருந்து ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் 19.04.2016 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேக நபரின் வீட்டில் இருந்து கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் எல்பட தோட்டப்பகுதியில் இருந்து நான்கு கஞ்சாபக்கட்கள் தனக்கு கிடைத்ததாகவும் அதில் 18.04.2016 அன்றைய தினம் ஒரு பக்கட் ரூபா 300 படி மூன்று பக்கட்களை விற்பனை செய்ததாக பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

 குறித்த சந்தேக நபரை 19.04.2016 அன்றைய தினம் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

n10