செய்திகள்

கடத்தல் சம்பவங்களுடன் கடற்படையினருக்கு தொடர்பு: நீதிமன்றில் பொலிஸார்

முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொடவின் மெய்ப்பாதுகாவலர் ஓருவரிற்கு கொழும்பில் 2009 இல் இடம்பெற்ற ஆட்கடத்தல்களுடன் தொடர்புள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கடற்படை தளபதியின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்ட சம்பத் முனசிங்க என்பவரிற்கு ஆட்கடத்தல்களுடன் தொடர்புள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

முனசிங்க தலைமையிலான குழுவினர் 2009 ம் ஆண்டு தெகிவளையில் 5 இளைஞர்களை கடத்தியுள்ளனர்.பின்னர் அவர்கள் குறிப்பிட்ட இளைஞர்களின் பெற்றோர்களிடமிருந்து 100 மில்லியனை கோரியுள்ளனர் என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.