செய்திகள்

கடந்த காலத்திலிருந்து ஒரு மாற்றம்-கிரிக்கின்போ

ஆத்திரமடைவது மனித இயல்பு,அதற்கு வயது வித்தியாசமில்லை, பல வேளைகளில் தூண்டப்படுகிறோம்,சில வேளைகளில் அது இயல்பான குணமாக காணப்படுகின்றது.  விராட்கோலி போல. சீற்றம் வெளியேற்றப்பட்டதும். பின்னர் அது ஏன் இடம்பெற்றது என்ற சிந்தனை ஆரம்பித்துவிடும்,கோலி நிச்சயமாக தனது நடவடிக்கை குறித்து சிந்தித்துள்ளார்போல தோன்றுகின்றது. அவரை வி;ட இந்திய கட்டுப்பாட்டுச்சபை தீவிரமாக சிந்தித்துள்ளது.

pcvnOsjjehjia_smallமுன்னைய கட்டுப்பாட்டுச்சபைகள் போல இல்லாமல் வீரர்களுக்கும், ஊடகங்களுக்கும் இடையிலான பாதிக்கப்பட்டஉறவை சரி செய்ய அது முயன்றுள்ளது.கோலியின் சீற்றத்திற்குள்ளான ஊடகவியலாளரிடம் நேரடியாக மன்னிப்பு இதுவரை கோரப்படவில்லை. எனினும்இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என தெரிவித்துள்ளதன் மூலமாகவும்,இந்திய அணியின் கௌரவத்தை பேணுமாறு கோலியை கோரியுள்ளதன் மூலமாகவும் கட்டுப்பாட்டுச் சபை தனது வழமையான எல்லையை கடந்து செயற்பட்டுள்ளது.எதிர்கால செயற்பாடுகள் குறித்து எச்சரிக்கையையும் வழங்கியுள்ளது.

புதன்கிழமை கோலி பத்திரிகையாளர் மோதல் குறித்த செய்திவெளியான வேளை, அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை இந்திய அணியின் முகாமையாளர்கள் குறைத்து மதிப்பிட்டனர். மேலும் இந்த சம்பவத்தை சாதாரண சம்பவமாக கருதி அலட்சியப்படுத்த முயன்றனர்.

சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்வதற்கான போதிய கால அவகாசமிருந்த போதிலும் அவர்கள் அதனை செய்யவில்லை.அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், இந்த விடயம் குறித்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, கோலி எந்த கட்டத்திலும் தவறான வார்த்தை பிரயோகத்தை மேற்கொள்ளவில்லை,விராட் குறிப்பிட்ட நபருடன் உரையாடியுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Jasvinder-sidhuஎனினும் இது பிழையான தகவல்களை கொண்ட அறிக்கை.மைதானத்திலிருந்த பலர் கோலி தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டார் என்கின்றனர்.மேலும் கோலி நேரடியாக குறிப்பி;ட்ட ஊடகவியலாளருடன் பேசவில்லை வேறு ஓருவர் மூலமாகவே தனது கருத்தை முன்வைத்துள்ளார்.பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரோ கோலி மன்னிப்பே கேட்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தலைவரிடம் தெரிவித்துள்ளார்.

சின்துவும் அவரது சகாக்களும் பொய்சொல்கிறார்கள் என கருதினால் மாத்திரமே கோலி தகாத வார்த்தைகளால் திட்டவிலலை என கருதமுடியும்.ஆனால் கோலி என்னசெய்தார் என்பது வெளிப்படையான விடயம்.

இந்திய அணி நிர்வாகம் நினைத்திருந்தால் சம்பந்தப்பட்ட சகல தரப்பிடமும் விளக்கம் கோரியிருக்கலாம்.எனினும் அவர்கள் வெறுமனே பிழையான அறிக்கையுடன் விடயத்தை முடித்துக்கொள்ள தீர்மானித்துள்ளனர்.

இது முன்னைய தலைவர் சிறீனிவாசன் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிழையான ஓரு கலாச்சாரம்.அவர் ஊடகங்களை அவமதித்தார், அதனை அணிமற்றும் நிர்வாகத்திற்குள் வளர்த்தெடுத்தார்.வீரர்கள் மீது எந்த வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை,ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்படுவதில்லை.ஊடகங்களுக்கும் வீரர்களுக்கும் இடையே நம்பிக்கையின்மை வளர்க்கப்பட்டது.

கோலி விடயத்தின் மூலமாக கட்டுப்பாட்டுச்சபையின் புதிய தலைமை வெளிப்படுத்தியுள்ள சமிக்ஞை சிறீனிவாசன் காலத்திற்கு நேர்மாறானது, வரவேற்கத்தக்கது.