செய்திகள்

கடந்த தேர்தலில் மலையக மக்கள் தொண்டமானுக்கு பாடம் படிப்பித்துள்ளனர்: விஜித ஹேரத் (வீடியோ)

மக்கள் விடுதலைமுன்னணியின் மஸ்கெலியா தேர்தல் தொடர்பாளர் காரியாலயம் 17.05.2015 அன்றுஅட்டனில் இக்கட்சியின் பிரச்சாரசெயலாளரும் பாராளுமன்றஉறுப்பினருமான விஜித ஹேரத் அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

இதில் அகில இலங்கைதோட்டதொழிலாளர் சங்கத்தின் செயலாளர் க.செல்வராஜா,சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்களானகலைச்செல்வி,பாஸ்கர் உட்படபலர் கலந்துகொண்டனர்.

இதன்போதுமக்கள் விடுதலைமுன்னணியின் பிரச்சாரசெயலாளரும் பாராளுமன்றஉறுப்பினருமானவிஜிதஹேரத்கருத்துதெரிவிக்கையில்…..
கடந்தகாலத்தில் முன்னால் ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெற்றமோசடிகளுக்குஎதிராககுரல் கொடுத்ததுமக்கள் விடுதலைமுன்னணியேஆகும்.

அதன் விளைவாகவேஇப்போதுநல் ஆட்சி என்றபெயரில் ஆட்சிநிலவுகின்றது. அதிலும் தற்போதைய ஜனாதிபதிமைத்திரிபாலசிரிசேனபக்கம் ஒருசாராரும். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பக்கம் ஒருசாராரும் இருந்துகொண்டுதிருடர்களைபாதுகாக்கின்றனர்கள். இதன் ஒருகட்டமாகவே ஸ்ரீலங்காசுதந்திரகட்சிசெயற்படுகின்றது.

குறிப்பாகநாட்டில் பலதிருடர்கள் இருக்கின்றார்கள். அவர்களுள் முன்னால் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானும் ஒருவர். உதாரணமாகநோர்வூட் பிரதேசத்தில் கால்பந்துமைதானம் அமைப்பதாக கூறிஅதில் பலமோசடிகள் இடம்பெற்றுள்ளமைஇன்றுவெளியாகியுள்ளது.

அதேபோல் பலஅரசியல்வாதிகள் ராஜபக்ஷவின் ஆட்சியில் திருடர்களாகவே செயற்பட்டார்கள். இவர்களுக்குமக்கள் சரியானபாடம் கற்பித்துள்ளனர். குறிப்பாககடந்த ஜனாதிபதிதேர்தலின் போதுமலையகமக்கள் தொண்டமானின் சொல்லுக்கு அடிப்பணியாது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு வாக்களித்தனர். இது மலையகமக்கள் தொண்டமானுக்குபாடம் கற்பித்துள்ளனர்.

மக்களின் உரிமைக்காகபோராடவும் திருடர்களுக்குதண்டனைபெற்றுக்கொடுக்கமக்கள் விடுதலைமுன்னணிஎன்றும் தயாராகஉள்ளது.

இப்போதுஉள்ளஆட்சியில் நாங்கள் பங்குதாரர்கள் அல்ல. எனினும் நிறைவேற்றஅதிகாரசபையில் எமதுகட்சிபங்களிப்புசெய்கின்றது. அதன் கீழ் 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களுக்குபாரியநன்மைகள் கிடைக்காவிட்டாலும் எமதுதலையீட்டில் பலநன்மைகள் நாட்டுக்குகிடைத்துள்ளது. குறிப்பாக 19வது திருத்தச்சட்டத்தின் ஊடாகசுயாதீனஆணைக்குழுக்கள் நிருவப்பட்டுள்ளது.

இதனூடாகநாட்டில் பொலிஸ் சுயாதீனஆணைக்குழு,நீதி,சட்டம் சுயாதீனஆணைக்குழு,தேர்தல் சுயாதீனஆணைக்குழு போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. முன்புமுன்னால் அமைச்சர் தொண்டமான் அவர்கள் அட்டன் வருவதாக இங்குள்ள பொலிஸாருக்கு தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் அணைவரும் வீதியில் இருமருங்களிலும் நின்றுமரியாதை செலுத்துவர் அந்தளவுக்குபொலிஸ் திணைக்களம் அரசியல்வாதிகள் அடிமையாக இருந்தது.

ஆனால் இன்றுஅவ்வாறுஅல்ல. பொலிஸ் பிரிவுசுயாதீனமாக இயங்கலாம். இது நாட்டுக்குகிடைத்தவெற்றி இதேபோல் நீதிதுறையும் செயற்படுகின்றது.

இந்தநாட்டில் வாழ்கின்றதமிழ்,சிங்கள, மூஸ்லீம் அணைவருக்கும் காணிஉரிமைவழங்கப்படவேண்டும். ஆனால் இது இப்போதுஅரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகவில்பத்துபிரதேசத்தில் வாழ்ந்த மூஸ்லீம் மக்களுக்குஅவர்களின் காணிகளைஅவர்களுக்குவழங்கவேண்டும்.

அதேபோல் மலையகமக்களுக்கு காணி உரிமைவழங்கப்படவேண்டும். 1948தொடக்கம் 2015 வரை மலையகதலைவர்கள் என்று கூறிகொண்டு அரசாங்கத்தில் இருந்தவர்கள் இந்தமக்களுக்கானகாணிஉரிமையைபெற்றுக் கொடுத்திருக்கின்றார்களா? இல்லை.

கடந்தவாரம் அமைச்சர் திகாம்பரம் அவர்களினால் மலையகமக்களுக்கான காணி உறுதிபத்திரம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணிலும் கலந்துகொண்டார்.ஆனால் இவ்வுறுதிபத்திரம் முற்றிலும்பொய்யானவிடயமாகும். அதாவதுஇலங்கையின் காணி உரிமை தொடர்பாகசட்ட மூலம் இருக்கின்றது. அதற்கு அமைவாகவே காணி உரிமை வழங்கப்படவேண்டும்.

இதற்குபாராளுமன்றத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும். ஆனால் அப்படிஒன்றும் நடைபெறவில்லை. வழங்கப்பபட்டஉறுதிபத்திரத்தில்காணியின் அளவுபெறுமதிஒன்றுமேகுறிப்பிடப்படவில்லை. ஆகவே இக்காணிஉறுதிபத்திரம் முற்றிலும்எதிர்வரும் பாராளுமன்றத்தில் தேர்தலை இலக்காகவேவைத்துநடத்தியஒருநாடகமாகும்.

வடக்கு,கிழக்கில் வாழ்கின்றதமிழ், மூஸ்லீம் மக்களுக்குஅவர்களுக்கானபாதுகாப்புமற்றும் காணிஉரிமைவழங்கப்படவேண்டும். ஆகவேநாட்டுக்குஉண்மையானநல் ஆட்சியைஏற்படுத்தமக்கள் விடுதலைமுன்னியால்மாத்திரமேமுடியும் அதேபோல் மலையகமக்களுக்குநல்லதலமைத்துவத்தைவழங்கஎம்மால் மட்டுமேமுடியும் எனதெரிவித்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=b-BFFo5Z4Bk&feature=youtu.be” width=”500″ height=”300″]

[youtube url=”https://www.youtube.com/watch?v=5GciqoKHC2Q&feature=youtu.be” width=”500″ height=”300″]

Vijitha Keratrh (2) Vijitha Keratrh (3) Vijitha Keratrh (4)