செய்திகள்

கடந்த 8 நாட்களில் வாகன விபத்துக்களில் 84 பேர் பலி

நாட்டில் கடந்த எட்டு நாட்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காலப்பகுதியில்  71 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றில் அதிகமானவை சாரதிகளின் கவனயீனத்தால் இடம்பெற்றவையெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன. எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளன. இதன்படி இடம்பெற்ற விபத்துக்களில் 84 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.