செய்திகள்

கடலில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை அகற்ற கோரி வழக்கு 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவு அறிவிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றவேண்டும் என்று  தமிழக அரசுக்கு தாக்கல் செய்த மனுவினை 3 மாதங்களுக்குள் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதி டி.எஸ்.சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்கும் போது மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி இறந்து விடுவதால் மீன் இன பெருக்கம் தடைப் படும் எனக் கருதி தமிழக அரசு சுருக்கு வலைகளை பயன்படுத்துவதற்கு தடை விதித்திருந்தது.
சுருக்கு வலைக்கு தடை விதித்தது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டபோதுஇ இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு  நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அமைத்திருந்ததைத் தொடர்ந்து  இந்த குழு ஆய்வுகளை மேற்கொண்டுஇ சுருக்கு வலையின், பின்னல் அளவை பெரிதுபடுத்தி, அதன்பின்னர் அந்த வலையை பயன்படுத்த மீனவர்களுக்கு அனுமதி வழங்கலாம் என்று சிபார்சு செய்துள்ளது.

நிபுணர் குழுவின் சிபார்சின் அடிப்படையில் சுருக்கு வலைக்கு விதிக்கப்பட்ட தடையை அகற்றவேண்டும் என்று  தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படாத நிலையில் மீனவர் செல்வம் உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மற்றுமொரு மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், ‘சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் தொழிலில் பல குடும்பங்கள் ஈடுபட்டுள்ளது. எனவே, அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் விதமாக தடை விதித்தால், அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே மத்திய அரசு வலையின் அளவை பெரிதாக்கி பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளதால், மனுதாரர்களின் கோரிக்கை குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலனை செய்து தகுந்த உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.