செய்திகள்

கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் டொங்காவில் சுனாமி!

பசிபிக் நாடான டொங்காவில் கடலுக்கடியில் எரிமலை வெடித்ததால் கடலில் அந்த நாடு முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிமலை வெடித்தபின்னர் கடலில் மிகப்பெரிய அலைகள் எழுந்தாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் கரையோரப் பிரதேசங்களை சுனாமி தாக்குவதை போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

கடலுக்கு அடியில் சீற்றத்துடன் இருந்த எரிமலை வெடித்தை தொடர்ந்து கடலுக்குள் இருந்து சாம்பல் வெளியேறுவதை போன்ற வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

-(3)