செய்திகள்

கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையத்தை இலங்கையில் அமைக்கிறது சீனா

கடல்சார் அனர்த்த அவதானிப்பு நிலையம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு சீனா உதவி வழங்கவுள்ளது.  மீனவர்கள் கடல் அனர்த்தங்களில் சிக்கிக் கொள்வதைத் தடுக்கவே இந்த அவதானிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக,  கடந்த வாரம் சீனாவின் அரச சமுத்திர நிர்வாக பிரதி நிர்வாகி சாங் ஹொங்செங் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு இலங்கை  வந்திருந்தது.

இந்தக் குழுவினர், கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தது.

n10