செய்திகள்

கடல்வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்த இருவர் கைது

இந்தியாவின் திட்டமிட்ட குற்றம் தொடர்பான புலனாய்வு பிரிவு மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திற்கு வாகனம் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட 130 கிலோ கஞ்சாவையும் இந்திய பொலிஸார் மீட்டுள்ளனர்.

பரமக்குடி அருகே உள்ள கமுதகுடி ரயில் கடவையில் வாகனம் ஒன்றை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன்படி வாகன சாரதி கே.ஸ்டீபன் மற்றும் உதவியாளர் எஸ்.தர்மேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.