செய்திகள்

கடல் வழியாக குடாநாட்டுக்குள் கடத்திவரப்பட்ட 150 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது: நால்வர் கைது

யாழ்.வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதி கடல் ஊடாக குடாநாட்டுக்குள் கடத்தி 150 கிலோ கஞ்சா போதைப்பொருளை விசேட அதிரடிப் படையினர் இன்று கைப்பற்றியுள்ளனர். இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்பில் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

படையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்தே விசேட அதிரடிப்படையினர் காலை 4.30 மணிக்கு சோதனை நடத்தி இந்த போதைப்பொருட்களை கண்டுபிடித்தனர். இச் சம்பவத்துடன் தொடர்பில் ஒரு முஸ்லிம் நபர் உட்பட 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

kajna-jaffna-003