செய்திகள்

கடும் இழுபறிக்குப் பின்னர் தெரிவான புதிய யாழ்.பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள்

யாழ்.பல்கலைக்கழகத்துக்கான புதிய பேரவை உறுப்பினர்களாக 14 பேருக்குப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.இதனையடுத்துக் கடந்த சில மாதங்களாக இழுபறியிலிருந்து வந்த பேரவை உறுப்பினர்கள் தெரிவு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களின் விபரம் வருமாறு,

யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன்,முன்னாள் அரச அதிபர் நேசையா,செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், பேராசிரியர் சிற்றம்பலம், பேராசிரியர் தர்மரத்தினம், வைத்திய நிபுணர் லக்ஸ்மன், வைத்திய நிபுணர் ஜெயக்குமார், வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் ரங்கராஜன், பேராசிரியர் ஹிஸ்புல்லா, பேராசிரியர் ரட்னாயக்க, பொறியியலாளர் விக்கினேஸ்வரன், கணபதிப் பிள்ளை சிவசேகரம், மனோசேகரம் ஆகியோரே பேரவை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட பதினான்கு பேருக்குமான நியமனக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை(24.04.2015) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த அரசின் காலத்திலிருந்த பேரவை பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கலைக்கப்பட்டுப் புதிய பேரவை புதிய அரசின் காலத்தில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.நகர் நிருபர்-