செய்திகள்

கடும் உஷ்ண கால நிலைக்கு மத்தியிலும் மட்டக்களப்பில் மக்கள் ஆர்வத்துடன் புத்தாண்டு பொருள் கொள்வனவு

தமிழ் சிங்கள புத்தாண்டினை குதூகலமாக கொண்டாடும் வகையில் தமிழ் சிங்கள மக்கள் தயாராகிவருகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றபோதிலும் அலைஅலையாக மக்கள் வர்த்தக நிலையங்களை நோக்கிச்செல்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் சித்திரைப்புத்தாண்டுக்கான பொருள்கொள்வனவுக்காக மட்டக்களப்பு நகரை நோக்கிவந்துசெல்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் உஷ்ணம் நிலவும் நிலையிலும் களுவாஞ்சிகுடி,கொக்கட்டிச்சோலை,காத்தான்குடி,மட்டக்களப்பு,ஏறாவூர்,செங்கலடி,வாழைச்சேனை ஆகிய நகர்ப்பகுதிகளை நோக்கிய பெருமளவானோர் வருவதை காணமுடிகின்றது.

பொதுமக்கள் சிறந்த முறையில் அச்சம் இன்றி தமது கடமைகளை மேற்கொள்ளும் வகையில் விசேட பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

நல்லாட்சியின் கீழ் வறுமையான மக்களும் சித்திரைப்புத்தாண்டை கொண்டாடும் வகையில் பல்வேறு செயற்றிட்டங்கள் மேற்கொள்ள்பபட்டுவருவதன் காரணமாக பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் சித்திரைப்புத்தாண்டை வரவேற்க தயாராகிவருகின்றனர்.

01 02