கடும் புயல் காரணமாக வனாட்டுவில் பாரிய அழிவு
பசுவிக்கின் வரவாற்றில் மிககடுமையான புயல்காரணமாக வனாட்டு தீவுகளில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவு சொத்துக்களுக்கு அழிவு ஏற்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு 340 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய பாம் சூறாவளி காரணமாக குறிப்பிட்ட தீவு உலகிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம்,மற்றும் தொலைதொடர்பு வசதிகள் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ள அதேவேளை பாரிய மனிதாபிமான நெருக்கடி உருவாகலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வனாட்டுவின் வரலாற்றில் முன்னர் எப்போதும் எதிர்கொள்ளப்படாத புயல்இதுவெனவும், பசுவிக்கின் வரலாற்றில் மிகப்பெரிய இயற்கை அனர்த்தமிதுவெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய நகரான பிரிஸ்பேனிலிருந்து 2000 கிலோமீற்றர் வடகிழக்கில் வனாட்டு தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகயிருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை சரியான எண்ணிக்கை தெரியவருவதற்கு இன்னமும் சில நாட்கள் பிடிக்கலாம் என மனிதாபிமான பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட புயல்காரணமாக உலகம் முடிவிற்கு வரப்போகி;ன்றது போல தோன்றியது என யுனிசெவ் அமைப்பின் பேச்சாளர் ஓருவர் அந்த தீவிலிருந்து தெரிவித்துள்ளார்.நகரத்தின் மத்தியில் பாரிய குண்டுவெடித்தது போன்ற நிலை காணப்படுகின்றது.மின்சாரமில்லை, தண்ணீர்pல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புயல் காரணமாக கடல்நீர் 26 அடி உயரத்திற்கு எழுந்ததாகவும் நகரம் முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வீதிகளில் பெருமளவு மரங்கள் முறிந்துகிடக்கின்றன,தீவு முழுவதும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என வேர்ல்ட் விசன் அமைப்பு தெரிவித்துள்ளது.இந்ததீவின் அனேகமான மக்கள் விவசாயிகள்,தங்களுடைய பாவனைக்காக பயிர்செய்பவர்கள், பயிர்கள் முற்றாக அழிந்து போயிருக்கும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா உடனடியாக உதவுவதற்கு முன்வந்துள்ள அதேவேளை ஐ.நாவும் நிவாரண பணிகளுக்காக தயாராகிவருகின்றது.