செய்திகள்

கடும் போட்டி காத்திருக்கிறது

கொழும்பு முழுவதும் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் எங்கள் ஜனாதிபதி என சிங்களத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தனது வழமையான வெள்ளை ஆடை சிவப்பு சால்வையுடன் தன் இலங்கையின் ஜனாதிபதியாக ராஜபக்ச 2005லிருந்து பதவி வகிக்கின்றார்,மூன்றாவது தடவையாகவும் பதவிவகிக்க வேண்டுமென அவர் விரும்புகின்றார்.ஜனவரி 8 ம் திகதிக்கு பின்னரும் சுவரொட்டிகளில் உள்ள அந்த வார்த்தைகள் தொடர்வதை அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.
எனினும் இம்முறை போட்டி அவ்வளவு சுலபமானதாக அமையாது. ராஜபக்சவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்து மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி எதிரணியின் பொதுவேட்பாளாராக மாறியுள்ளநிiயில்,முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும்,முன்னாள் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவும் அவருக்கு ஆதரவளிக்கின்றனர். இதன் காரணமாக அரசியல் கணிப்பீடுகள் கடினமானதாகியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடிக்கவேண்டும் என விரும்பும் கட்சிகள் தங்களது அரசியல் மற்றும் கொள்கை பேதங்களை மறந்து, பொதுவேட்பாளருடன் மெல்ல இணைந்துகொண்டுள்ளமை,எதிர்கட்சிகளை வலுப்படுத்தியுள்ளது.
இது வாழ்வா சாவா என்ற தேர்தல் ஜனாதிபதி மூன்றாவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டால்,நாட்டிற்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என தன்னை இனம்காட்ட விரும்பாத மூத்த அரசியல்வாதி ஒருவர் தெரிவித்தார்.
sam-34

எனினும் எதிர்கட்சிகளின் பயணம் இலகுவானதாக அமையப்போவதில்லை.இலங்கையின் மக்கள் கவர்ச்சியுடைய அரசியல்வாதியாக தற்போதைய ஜனாதிபதி காணப்படுகி;ன்றார்.அவர் கிராமத்தை சேர்ந்த ஒருவராக காணப்படுவதும்,மக்களை இலகுவாக கவரக்கூடிய ஆற்றலும்,அவரது ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப்படும் முக்கியமான விடயங்கள், அதனை விட அவர் தோற்றகடிக்க முடியாதவர் என்றும் அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர் . இலங்கையின் தசாப்த கால உள்நாட்டு போரை அவர் முடிவிற்கு கொண்டுவந்தமை அவர் குறித்த இந்த உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அவரை கடுமையாக விமர்சிப்பவர்களை பொறுத்தவரை ராஜபக்ச,யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் ஒரு தலைவர்.அரசியல் அமைப்பை மீளவடிவமைத்ததன் மூலம் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியவர், தான் மீண்டும் போட்டியிடக்கூடிய நிலையை உருவாக்கியவர்.
நாடு அதிகளவு இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது, ஊழல் மிகுந்ததாக மாறியுள்ளது.ஜனநாயக சூழல் குறைவடைந்துள்ளது.ஊடக மற்றும் மத சுதந்திரங்கள் மிகமோசமாக அச்சுறுத்தப்பட்டுள்ளன.சட்டத்தின் ஆட்சி, சுதந்திரமான நீதித்துறை இல்லாததும், அவரது நிலையை பலப்படுத்த உதவியுள்ளன என அவரை எதிர்ப்பவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அதிகரித்துள்ள வாழ்கைச்செலவீனங்களும், வருமானங்களில் ஏற்பட்ட வீழ்ச்சி மக்களைசெய்வதறியாத நிலைக்கு தள்ளியள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
sam-33

ஐக்கியப்பட்டுள்ள எதிரணியினர் 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவதாக வாக்குறுதியை வழங்கியுள்ளனர்.அதேவேளை அரசாங்கம் அதற்கு மாற்றீடு ஒன்றை தேடிவருகின்றது.
இரத்தக்களறி மிகுந்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் தமது வாழ்க்கையை மீள கட்டியெழுப்புவதற்கு ஒரு பகுதி மக்கள் போராடிக்கொண்டிருக்கும் இலங்கையில் பலதரப்பட்ட ஊகங்கள் வெளியாகின்றன.தேர்தல் விவாதங்களும் சூடுபிடிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டில் தனது தந்தை உருவாக்கிய ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பழம்பெருமையை மீட்பதற்கு இணையுமாறு தனது கட்சி ஆதரவளார்களுக்கு உணர்வுபூர்வமான அழைப்பொன்றை விடுத்தார்.ராஜபக்சாக்கள் கட்சியை அழித்துவிட்டனர் என அவர் குற்றம்சாட்டினார்.
முக்கிய எதிர்கட்சியான ஐக்கியதேசியகட்சி கடந்த சில வருடங்களாக பலவீனமடைந்து வந்துள்ளது, உட்கட்சி பூசல்களிலேயே தனது கவனத்தை செலுத்திவந்துள்ளது.அதன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க பலதரப்பினதும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்,எனினும் செப்டம்பரில் நிலைமை அவரிற்கு மகிழ்ச்சியளிக்க கூடிய விதத்தில் மாறத்தொடங்கியது.ஊவா மாகாண சபைத்தேர்தலில் அவரது கட்சி ஆளும் கட்சிக்கு கடும்நெருக்கடியை கொடுத்தது.ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடாமல் பொதுஎதிரணியுடன் இணைந்ததன் மூலம் ரணில்விக்கிரமசிங்க மிகச்சிறந்த முடிவை எடுத்துள்ளதாக அவரை விமர்சிப்பவர்கள் கூட ஏற்றுக்கொள்கின்றனர்.
எனினும் இவை அனைத்தையும் அர்த்தமற்றவை என வர்ணிக்கும் ராஜபக்சமுகாமின் உறுதியான உறுப்பினர் ஒருவர்,இவை முக்கியமில்லாத விடயங்கள் , ஜனாதிபதியை முழு தென்பகுதியும் ஆதரிக்கின்றது,அவர் வெற்றிபெறுவார் என்கிறார்.
sam-36

அவரது நம்பிக்கையை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை,மகிந்த ராஜபக்ச நம்பியிருக்கின்ற சிங்கள பெரும்பான்மை சமூகத்தினர் அவர் குறித்து ஏமாற்றமடைந்துள்ளனர் என்கிறார்அரசியல் செல்வாக்குள்ள பௌத்த மதகுரு சோபிததேரர்.தற்போது பொது எதிரணியின் உறுப்பினரான அவர் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் மகிந்த ராஜபக்சாவிற்கான ஆதரவு குறைவடைந்து வருவதாக தெரிவிக்கின்றார்.
யுத்தம் முடிவடைந்து ஜந்து வருடங்களான பின்னரும் இலங்கையின் வடபகுதி நேர்மையான நல்லிணக்கத்திற்காகவும், புனர்நிர்மானம் மற்றும் குறிப்பிடத்தக்க அதிகாரப்பகிர்விற்காகவும் காத்திருக்கின்றது.முன்னரை விடசிறந்த வீதிகளும், மின்சாரமும் அவர்களுக்கு கிடைத்துள்ளன. ஆனால் யுத்தத்தை எதிர்கொண்டவர்களின் வாழ்க்கையை மீளகட்டியெழுப்புதல் என்பது வெறுமனே உட்கட்டமைப்பு அபிவிருத்தி மாத்திரமல்ல.
யுத்தத்தின் பின்னர் காணமற்போனவர்களின் குடும்பத்தவர்கள் இன்னமும் அவர்களை தேடியவண்ணமுள்ளனர்-காணமற்போதலுக்கு படையினரே காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். தங்கள் குடும்பத்தவர்களையும்,வீடுகளையும், சொத்துக்களையும்,நம்பிக்கைகளையும் இழந்ததை இன்னும் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு பல குடும்பங்கள் வரவில்லை.
தீவிர கண்காணிப்பு, இராணுவமயப்படுத்தப்படுதல்,விவசாய மற்றும் மீன்பிடி நெருக்கடிகள்,வேலைவாய்ப்பின்மை , பாரிய கடன்சுமை போன்றவை வடபகுதி மக்களுக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்துள்ளன.
sam-35

இதேவேளை நிச்சயமாக தெரிகின்ற இன்னொரு விடயம் தமிழ்மக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக வாக்களிக்கப்போகின்றனர் என்பதே,அதேவேளை எதிரணியினா குறித்து அவர்கள் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை.
அரச ஆதரவுடன் செயற்பட்டுவரும் தீவிரவாத போக்குடைய பௌத்த குழுக்களால் தமிழ்பேசும் முஸ்லீம்கள் கடந்த சில வருடங்களா இலக்குவைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம்களின் வழிபாட்டுத்தலங்களும் தாக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்துடன் நாங்கள் இணைந்திருந்தால் நாங்கள் எங்கள் தொகுதிக்கே செல்ல முடியாது என முஸ்லீம் அரசியல்வாதியொருவர் தெரிவித்தார்.
பல குழுக்களுக்கு இந்த தேர்தல் பலவிதமான எதிர்பார்ப்பினை உருவாக்கியுள்ளது. ஆனால் அவர்களில் அனேகமானவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். ஆனால் மிகக்குறைவானவர்களே அது குறித்து பகிரங்கமாக கருத்துதெரிவிக்கின்றனர். மிகத்திறமையான, அரசியல்வாதியென்ற என்ற வகையில் ராஜபக்ச இது குறித்து நிச்சயமாக அறிந்திருப்பார்.யுத்த குற்றம் தொடர்பான ஐ.நாவிசாரணை குறித்த சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் பல உலக நாடுகள் இலங்கையில் தற்போது என்ன நடைபெறுகின்றது என்பதை உன்னிப்பாக அவதானித்தவண்ணமுள்ளன.

மகிந்த ராஜபக்ச புதிய வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன்னர் நிறைவேற்றவேண்டிய பல வாக்குறுதிகள் உள்ளன- என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர்.

மீரா ஸ்ரீநிவாசன் Frontline சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்