செய்திகள்

கடும் மழையால் கொழும்பில் 22 குடும்பங்கள் இடப்பெயர்வு

கடும் மழையால் கொழும்பு மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவு நிலையத்தின் உதவி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதால் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்

மின்னல் தாக்கம் காரணமாக இந்த வருடம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதென இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.