செய்திகள்

கட்சியை நடத்திச்செல்ல தடையாக இருக்க வேண்டாம் : கட்சியினரிடம் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமிருந்து கட்சியை நான் பெற்றுவிட்டேன். இந்த கட்சியை கொண்டுசெல்ல வழிவிடுங்கள்.

தடையாக இருக்கவேண்டாம். மஹிந்த ராஜ பக்ச ஜனாதிபதியானவுடன் சந்திரிகா கட்சிக்காக பிரிந்துகொண்டு வரவில்லை. கட்சியிலுள்ள நீங்களே இப்படி  மனசாட்சிக்கு விரோதமாக நடக்க வேண்டாம்.

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அண்மையில் நடந்த கட்சிக் கூட்டமொன்றில் இவ்வாறு கூறியதாக கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்