செய்திகள்

கட்சி தலைமைத்துவத்திற்கு சவால் விடுப்பதை நிறுத்துங்கள் : மு.கா உறுப்பினர்களுக்கு ஹக்கீம் கோரிக்கை

கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இதனை விடுத்து வெளியில் சென்று கட்சித் தலைமைத்துவத்திற்கு சவால் விடுக்கும் செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ளுமாறு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது கட்சியினருக்கு தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படப் போவதாக தகவல்கள் வெளியாகும் நிலையில் நேற்று கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எல்லா கட்சிகளுக்குள்ளேயும் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அப்படி பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பாக கட்சிக்குள்ளேயே கலந்துரையாடி தீர்வு காண முயற்சிக்க வேண்டும். அதனை விடுத்து வெளியில் அறிக்கைகளை விடுத்தும் மற்றும் கட்சி தலைமைத்துவத்திற்கு சவால் விடுத்தும் செயற்படுவது பொறுத்தமல்ல. இவ்வாறு சவால் விடுப்பது தொடர்பாக கட்சிக்குள் தீர்மானமெடுக்கப்படும். இதேவேளை ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவையேற்பட்டால் அது தொடர்பாக கட்சி தீர்மானிக்கும். என அவர் தெரிவித்துள்ளார்.
n10