செய்திகள்

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் யாத்திரீகர்கள் செய்மதிகளுடன் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாத்திரீகர்கள்  செய்மதி இயந்திரங்கள் சிலவற்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.122 என்ற விமானத்தில் சென்னையில் இருந்து இலங்கை வந்த இவர்கள்  விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களின் பயணப் பொதியை சோதனைக்கு உட்படுத்திய சுங்கப் பிரிவினர் இந்த செய்மதிகளை மீட்கப்பட்டுள்ளனர். அதன் பெறுமதி 13 லட்சம் ரூபா என தெரியவருகின்றது.