செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர் வேலை நிறுத்தம்: மின் துண்டிப்பு! திசை திருப்பப்படும் விமானங்கள்

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, விமான நிலையத்துக்கு வரும் சில விமானங்கள் தாமதமடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கான பயணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சில விமானங்கள் இந்தியாவுக்கு திசை திருப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10,000 ரூபாய் சம்பள உயர்வை வலியுறுத்தி ஆளும் சுதந்திரக் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.