Search
Monday 30 November 2020
  • :
  • :
தலைப்பு செய்திகள்

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வர இசைமேதை பஞ்சாபிகேசன் மறைவின் ஒரு வருட நிறைவு

ஈழத்தின்  புகழ்பூத்த நாதஸ்வர இசைமேதை பஞ்சாபிகேசன்  மறைவின் ஒரு வருட நிறைவு

லங்கேஸ்

இசைமேதை பஞ்சாபிகேசன் முருகப்பா மறைந்த ஒரு வருட நினைவு சில தினங்களுக்கு முன்னர் அவர் பிறந்த வீட்டிலும் சிவன் கலாசார மண்டபத்திலும் நடைபெற்றன.

இசையன்றி வெறொன்றின் மீதும் பற்றில்லாதவராக விளங்கிய நாதஸ்வர வித்வான் பஞ்சாபிகேசன் யாழ் . சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டி அரச தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

இலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள இந்து ஆலயங்களில் மகோற்சவ திருவிழாக்களில் தலைமை நாதஸ்வர வித்துவானாக கடமையாற்றிய பெருமைக்கு உரியவர். குறிப்பாக அரியாலை சித்திவிநாயகர் ஆலயத்தின் மகோற்சவ விழாக்களில் நாதஸ்வரம் வாசித்த பெருமைக்குரியவர். இவர் நாகேந்திரன் (நாதஸ்வர வித்துவான்), விக்கினேஸ்வரன் (நாதஸ்வர வித்துவான்) ஆகியோரின் தந்தையுமாவார்.

நாதஸ்வர கலை பயணத்தை மிக நேர்த்தியாக கையாண்டு, ஒரு இசை பெட்டகமாக, பொக்கிஷமாக, மிக ஆழமான கணக்குகளுடன், முறைப்படி சங்கீத உலகத்திற்கு நாத பிரகடனப்படுத்திய நாதஸ்வர வித்துவான்களில் பஞ்சாபிகேஷனுக்கு முக்கிய இடமுண்டு.

முறையான பாடந்திரம், தொழில் பக்தி, சொன்ன சொல் தவறாமை, காலம் தவறாமல் கடமை ஆற்றுதல், இப்படி பல சொற்தொடர்களை நேர்மைக்கு உதாரணமாக அடுக்கிகொண்டே போகலாம்.

5

பஞ்சாபிகேசன் முருகப்பா அவர்களின் வாசிப்பு என்றால், ஒரு தனித்துவம் இருந்ததாக இசை ஆர்வலர்கள் பெருமை பட சொல்வதுண்டு. நாதத்தின் மீது அதீதமான ரசனை கொண்ட, தணியாத தாகம் கொண்ட ரசிகர்கள் வாழ்ந்த காலமது. நாதஸ்வரத்தின் ஆதிக்க காலமது என்று கூட சொல்லலாம். ஒரு பிடித்தமான ராகம் அல்லது பல்லவி மூலம் ஒரு நாதஸ்வரம் பார்வையாளர்களை பரவசப்படுதினால், உணர்ச்சி வயப்பட்டு அந்த வித்வானை கட்டி அனைத்து, ஆரத்தழுவி, கண்ணீர் ததும்ப பாராட்டிய ரசனை மிக்க கூட்டம் மிகுந்த காலம். அதில் நானும் ஒருவனாக இருந்திருக்கின்றேன்.

மேலாக ரசிகர்கள் பலர் ஒரு கோவில் திருவிழாவில் தங்களது நகைகளை கூட கழற்றி பஞ்சாபிகேசன் முருகப்பா அவர்கள் வாசித்த அந்த இனிமையான தில்லான மோகனம்பாள் படத்தின் பாடலை கேட்டவுடன் வழங்கியதை கண்முன்னாலே பார்த்ததுண்டு. ஏராளமான நாதஸ்வர தவில் வித்துவான்கள் வாழ்ந்துவரும் சிவ புண்ணிய பூமியிலே கோண்டாவில் (மூளாய்) பாலகிருஷ்ணன் சகோதரர்கள், அளவெட்டி குமரகுரு, இணுவில் கோவிந்தசாமி, அளவெட்டி பாலகிருஷ்ணன், சட்டநாதர் கோவிலடி N.முருகானந்தம் – தவில், காரைதீவு கணேஸ் – நாதஸ்வரம், சாவகச்சேரி பஞ்சாபிஷேகன் – நாதஸ்வரம், அளவெட்டி S.S.சிதம்பரநாதன், அளவெட்டி M.சிவமூர்த்தி – நாதஸ்வரம், அளவெட்டி R.கேதீஸ்வரன், யாழ்பாணம் K.நாகதீபன். இணுவில் சுந்தரமூர்த்தி புண்ணியமுர்த்தி சகோதரர்கள் போன்றோரை குறிப்பிடலாம்.

6

இவ்வாறாக புகழ் பூத்த நாதஸ்வர கலை மாமணி, நாதஸ்வர வித்துவான், நாதஸ்வர சூடாமணி, இசை சக்கராவர்த்தி, நாதஸ்வர விநோதமாமணி என பல உயரிய விருதுகளை பெற்ற பஞ்சாபிகேசன் முருகப்பா அவர்களின் இழப்பு உலகத்தில் வாழும் நாதஸ்வர இசை அபிமானிகளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் இழப்பால் துயர் உற்றிருக்கும் சகலருக்கும் உலக தமிழர்கள் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.

2 7


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *