Search
Thursday 26 April 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

எவ்பிஐ இயக்குநர் பதவி நீக்கத்தால் உருவான நெருக்கடி தீவிரமடைகின்றது

எவ்பிஐ இயக்குநர் பதவி நீக்கத்தால் உருவான நெருக்கடி தீவிரமடைகின்றது

– சிஎன்என்- தமிழில் சமகளம்

அமெரிக்காவின் புலனாய்வு பிரிவான எவ்பிஐயின் இயக்குநர் பதவி நீக்கப்பட்டதனால் உருவான சிக்கல்கள் தீவிரமடைய தொடங்கியுள்ளதை தொடர்ந்து நவீன அரசியல் வரலாற்றில் தானே உருவாக்கிக்கொண்ட மிகத் தீவிரமான நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான வழி தெரியாமல் வெள்ளை மாளிகை தத்தளிக்கின்றது.

டிரம்ப் அந்த முடிவை எடுத்து ஆறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் வெள்ளைமாளிகை டிரம்பின் நடவடிக்கையால் உண்டான பாதிப்புகளை சீர்செய்ய முயல்கின்றது.

எவ்பிஐ இயக்குநரின் பதவி விலகலிற்காக முன்வைக்கப்பட்டுள்ள காரணங்கள் முரண்பட்டவையாக காணப்படுவதால் வெள்ளை மாளிகையின் நம்பகதன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.டிரம்ப் நிர்வாகத்தால் மூண்டுள்ள மற்றுமொரு விரும்பத்தகாத சர்ச்சையை எதிர்கொள்வதற்கு குடியரசு கட்சி தயாராகிவருகின்றது.ஜனநாயக கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

டிரம்ப் இடையூறு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவது புதிய விடயல்ல இது அவரது பாணியாகவே மாறியுள்ளது.
எனினும் டிரம்பின் பிரச்சார குழுவினருக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள வேளை எவ்பி இயக்குநர் பதவி நீக்கம் செய்யப்பட்டமை அரசியல் குளறுபடிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

டிரம்ப் தற்போது தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்தார் என்ற தீடீர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அது மாத்திரமல்ல அவர் தன்னை சட்ட மற்றும் அரசியல் அமைப்பு சிக்கல்களுக்கும் சிக்கவைத்துள்ளார். அவரை கட்டுப்படுத்துவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என குடியரசுக்கட்சியினர் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தேசிய புலானய்வு அமைப்பின் முன்னாள் இயக்குநர் ஜேம்ஸ் கிளப்பர் ஞாயிற்றுக்கிழமை டிரம்பை கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க ஸ்தாபனங்கள் மீது டிரம்ப் தாக்குதல் தொடுத்துள்ளார் என அவர் சிஎன்என்னிற்கு தெரிவித்தார்.

f_comey_opnsttmnt_160707.nbcnews-ux-1080-600
டிரம்பின் நடவடிக்கைகளின் நேரடி விளைவே வெள்ளை மாளிகை எதிர்கொண்டுள்ள அரசியல் நடவடிக்கைகள் என்பது முக்கியமானது. ஆனால் அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்வார் என்பதற்கான எந்தவித அறிகுறிகளும் வெளியாகவில்லை.

ஏமாற்றமடைந்துள்ள சீற்றமடைந்துள்ள தனது ஜனாதிபதி பதவியின் பயணப்பாதை குறித்து கவனம் கொண்டுள்ள டிரம்ப தனது உணர்வுகளிற்கு ஏற்ப செயற்படுகின்றார். மற்றவர்களை சவுக்கால் அடிக்கின்றார், எதிர்வுகூறமுடியாத  பயணத்தை தொடர்கின்றார்.

புதிய எவ்பிஐ இயக்குநரை தேடுதல்
எவ்பிஜ இயக்குநருடன் தான் உரையாடிய விடயங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளமை வாசிங்டனில் ஏற்கனவே உள்ள நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக எவ்பிஐக்கான புதிய இயக்குநரை தேடும் அவரது முயற்சிகள் பாதிப்படைந்துள்ளன. எவ்பிஐ உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, வெள்ளை மாளிகையின் அரசியல் அழுத்தங்களின் கீழ் பணியாற்றக்கூடிய ஓருவரை- செனெட்டின் அங்கீகாரத்தை பெறக்கூடிய ஒருவரை டிரம்ப் தெரிவுசெய்யவேண்டும்.

எவ்பி ஐ இயக்குநராக பணியாற்ற முன்வரக்கூடிய ஒருவரை கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாக விளங்கப்போகின்றது என தெரிவிக்கின்றார் சிஐஏயின் முன்னாள் ஜேம்ஸ் வூல்ஸே.

நாங்கள் இந்த வாரம் சந்தித்துள்ள அரசியல்சூழ்நிலைகளின் கீழ் பணியாற்றகூடிய ஓருவரை சந்திப்பது மிகவும் கடினமானதாக அமையப்போகின்றது என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை புதிய இயக்குநரை கண்டுபிடிப்பதற்கான டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை கடினமானதாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஜனநாயக கட்சியினர் ஈடுபடப்போகின்றனர் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
டிரம்பின் பிரச்சார அதிகாரிகளுக்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக சட்டமா அதிபர் விசேட விசாரணையாளரை நியமிக்கும் வரை எவ்பிஐயின் புதிய இயக்குநர் நியமனத்திற்கு செனெட் அங்கீகாரம் வழங்ககூடாது என ஜனநாயக கட்சியியின் செனெட்டர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *