Search
Thursday 24 May 2018
  • :
  • :
தலைப்பு செய்திகள்

காணமற்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது என்பது இன்னமும் தெரியாநிலை

காணமற்போன ஆயிரக்கணக்கானவர்களிற்கு என்ன நடந்தது  என்பது இன்னமும் தெரியாநிலை

த எகனமிஸ்ட்- தமிழில் சமகளம்

அவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என நினைக்கின்றேன் என்கிறார்-தர்சினி சந்திரபோஸ்- முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளியான தனது கணவரை 2009 ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த காலத்தின் ஆரம்பநாட்களிலேயே அவர் இறுதியாக சந்தித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் சபை 40000ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர் என்கின்றது இவர்களில் சுமார் 10000 உறுதியான பிரிவினைவாத இராணுவத்தினரும் உள்ளனர்.

திருமதி சந்திரபோஸ் தனது கணவரை மீண்டும் காண்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

யுத்தத்தில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து எவருக்கும் துல்லியமாக தெரியாது- தமிழ் தேசியவாத கத்தோலிக்க மதகுரு ஓருவர் 26 வருட கால யுத்தத்தின் பின்னர் 147000 மக்களும் போராளிகளும் காணமற்போயுள்ளதாக தெரிவிக்கின்றார்- காணமற்போனவர்கள் குறித்து 1994 ம் ஆண்டு முதல் 65000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்கின்றது இலங்கை வெளிவிவகார அமைச்சர்.

இதேவேளை ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் அரசாங்கத்தின் புனர்வாழ்விலிருந்து மீண்டும் விடுதலையாகியுள்ளனர். பல தமிழர்கள் இரகசிய முகாம்கள் இன்னமும் உள்ளதாக கருதுகின்றனர் வேறு சிலர் அரசாங்கம் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளை வெளிநாடுகளில் உள்ள இரகசிய முகாம்களிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பாரிய மனித புதைகுழிகள் குறித்த விபரங்கள் தெரியவரும் என்பதனாலேயே இலங்கை இராணுவம் தான் கைப்பற்றிவைத்துள்ள நிலங்களை மீள ஓப்படைக்க மறுக்கின்றது என்ற கருத்தும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

வறிய மீனவ குடும்பத்தின் 12 பிள்ளைகளில் ஓருவரான திருமதி சந்திரபோஸ் (34) தானாகவே விரும்பி தனது 15 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதாக தெரிவிக்கின்றார்- அவரது மூன்று சகோதரர்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர் தனது 20 வயதில் அவர் ஓரு போராளியை திருமணம் செய்துகொண்டார் அவரது பெற்றோர் தற்போது கனடாவில் வாழ்கின்றனர் பல சகோதரர்கள் பிரான்சில் உள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட முன்னாள் போராளியான அவர் தற்போது சிறிய விவசாயத்தை நம்பி வாழ்கின்றார் அதிகாரிகள் தன்னை கண்காணிக்கின்றனர் பாராபட்சம் காட்டப்படுகின்றது என அவர் தெரிவிக்கின்றார்- அவர் தலையில் இன்னமும் காயம் காணப்படுகின்றது அதில் இன்னமும் குண்டுசிதறல்கள் உள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் அதன் தலைவருக்குமான அவரது விசுவாசம் இன்னமும் மிக உறுதியானதாக காணப்படுகின்றது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஈவிரக்கமற்ற தன்மைக்கு மத்தியிலும் இயக்கத்தில் இணைந்து கொண்டது குறித்து திருமதி சந்திரபோஸ் எந்த கவலையும் அடையவில்லை.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரிற்கு துரோகமிழைக்கப்பட்டதானாலேயே அவர் போரில் தோற்றார் என்கிறார் திருமதி சந்திரபோஸ்- விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து 2004 ம் ஆண்டு பல போராளிகளுடன் பிரிந்து சென்ற முக்கிய தளபதியை அவர் உதாரணம் காட்டுகின்றார். அந்த நாட்களில் நாங்கள் மகிழ்ச்சியாக காணப்பட்டோம் நாங்கள் பாதுகாப்பாக உறங்கினோம் எந்த குற்றங்களும் இடம்பெறுவதில்லை- எங்கள் சுயபொருளாதாரம் காணப்பட்டது என விடுதலைப்புலிகளின் காலத்தை நினைவுகூறுகின்றார் அவர்.

பல தமிழர்களை போன்று அவரும் சர்வதேச சமூகம் தலையிடவேண்டும் என விரும்புகின்றார் உலகம் தமிழர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதை உலகம் விரும்புகின்றதா என அவர் கேள்வி எழுப்புகின்றார்.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *