Search
Wednesday 21 August 2019
  • :
  • :
[video width="848" height="272" mp4="http://www.samakalam.com/wp-content/uploads/2016/05/Mewfashions.mp4"][/video]
தலைப்பு செய்திகள்

தமிழுக்கு ஓர் அரியணை

தமிழுக்கு ஓர் அரியணை

அ.முத்துலிங்கம்

சில மாதங்களுக்கு முன் ஒரு வெள்ளைக்காரரைச் சந்தித்தேன். இவர் தமிழ் நாட்டில் பல வருடங்கள் தமிழ் பயின்றவர். இப்பொழுது அமெரிக்காவில் தமிழ் கற்பித்து வருகிறார். பெயர் ஜொனாதன் ரிப்ளே. ஆனால் தமிழ் நாட்டில் இவரை எல்லோரும் ‘வெள்ளைக்காரன்’ என்றே அழைக்கிறார்கள். இவர் தமிழ் கற்றுக்கொண்ட அனுபவம் இன்னும் சுவையானது. 19 வயது வரைக்கும் இவருக்கு தமிழ் என்று ஒரு மொழி இருப்பதே தெரியாது. மீதியை அவரே சொல்கிறார்.

‘நான் ஒஹாயாவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். ஒருநாள் போலா ரிச்மன் (Paula Richman) படிப்பித்த வகுப்பில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர். அவருடைய சிறப்புக் கல்வி ராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சும்மா பார்க்கலாம் என்றுதான் போனேன். என் வாழ்கையே அடியோடு மாறப்போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர் பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒரு பாடலைச் சொல்லிக்கொண்டு போனார்.

நாமவ னிவனுவன், அவளிவளுவளெவள்
தாமவரிவருவர், அதுவிது வுதுவெது
வீமவை யிவையுவை, யவைநலந் தீங்கவை
ஆமவை யாயவை, யாய்நின்ற அவரே.

அந்தப் பாடலின் ஓசை நயமும் இனிமையும் காதுகளில் விழுந்தன. தொடர்ந்து வந்த பல நாட்கள் அந்த கீதம் காதுகளில் ஒலித்த வண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர்தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்று அறிந்தேன். ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது. அந்தக் கணமே முடிவுசெய்தேன்இ நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.’

பொஸ்டனில் ஒரு பேராசிரியருடன் தேநீர் அருந்தப் போனபோது அவர் பரிசாரகருடன் ஏதோ மொழியில் பேசினார். அவரும் அதே மொழியில் பதில் சொன்னார். ‘என்ன மொழி?’ என்று கேட்டேன். அவர் ‘நேப்பாள மொழி’ என்றார். ‘எப்படி அவர் நேப்பாளி என்பதைக் கண்டுபிடித்தீர்கள்?’ ‘அவருடைய உடை, முகச்சாயல், உடல் மொழி’ என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பேராசிரியருக்கு 18 மொழிகள் தெரியும். அவர் இன்னொரு விசயமும் சொன்னார். அது என்னை இரண்டாவது தடவையாக ஆச்சரியப்பட வைத்தது. ‘என் இள வயதிலேயே எனக்கு வேற்று மொழிகள் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிவிட்டது. இன்று எனக்கு தமிழ் மொழி பற்றி இருக்கும் அறிவு அன்று இருந்திருந்தால் நான் தமிழை முதல் மொழியாகப் பயின்று இருப்பேன். தமிழ் உலகத்தின் ஆதி மொழிகளில் மிகச் சிறந்த ஒன்று’ என்றார்.

இதையே இன்னொரு விதமாக சமீபத்தில் இறந்துபோன பேராசிரியர் பேர்னார்ட் பேட் சொன்னார். இவர் சிகாகோ பல்கலைக் கழகத்திலும் யேல் பல்கலைக் கழகத்திலும் பல வருடங்களாக தமிழ் கற்பித்தவர். ‘தமிழை அறிந்துகொள்வது உங்கள் கடமை அல்ல;

அதைப் பேசிப் புரிந்து இன்புறுவதற்காகப் படியுங்கள். ஓர் ஓவியத்தை அதன் அழகிற்காக ரசிப்பதில்லையா? ஓர் இசையை அனுபவிப்பதில்லையா? அதுபோல தமிழை அது தரும் இன்பத்திற்காக நுகருங்கள்.’ இந்த வெள்ளைக்காரர்கள் எல்லோரும் வியப்படைவது ஒரு விசயத்துக்குத்தான். இத்தனை தொன்மையான, பெருமையான தமிழை தமிழர்கள் ஏன் போற்றுவதில்லை? தமிழ் மொழியை உதாசீனப்படுத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகள் வேற்று மொழிகளில் புலமை அடைவதையே விரும்புகிறார்கள். இந்தப் புதிரை விடுவிக்க முடியாமல் என்னிடம் கேட்டபோது என்னாலும் தக்க பதில் தர முடியவில்லை.

யோசித்துப் பார்த்தால் சில விசயங்கள் தெளிவாகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்படவேண்டியுள்ளன. அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும்இ ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சரி செய்யப்படலாம். தமிழின் முக்கியத்துவத்தை பிறர் அறியவும், முக்கியமாகத் தமிழர்கள் அறியவும். ஹார்வார்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவது அவசியமாகிறது.

Drs

                       மருத்துவர்கள் திருஞானசம்பந்தம் மற்றும் ஜானகிராமன்

உலகத்தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழைக் கற்கவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதியாக ஓர் இருக்கை அமையவேண்டும். தமிழ் இருக்கைக்கு ஆரம்ப வித்திட்டது 18 சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் தனியொருவராக மொழிபெயர்த்து உலகப் புகழ் எய்திய திருமதி வைதேகி ஹெர்பெர்ட் அவர்கள். அவரது உந்து சக்தியால் அமெரிக்காவில் வதியும் இரு வள்ளல் பெருந்தகைகள், மருத்துவர் விஜய் ஜானகிராமனும், மருத்துவர் திருஞானசம்பந்தமும், ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் துறைத் தலைவரைச் சந்தித்து தமிழின் பெருமையையும் தொன்மையையும் விளக்கி தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றனர். இதற்கு தேவையான அறக்கொடை ஆறு மில்லியன் டொலர்கள். இரு மருத்துவர்களும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளனர். மீதி ஐந்து மில்லியன் டொலர்களை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கியங்களைக் கொண்ட தமிழ், உலகின் ஆதி மொழிகளுள் ஒன்றாகும். ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகில் உள்ள 20 பெரிய மொழிகளுள் அடங்கும். அண்மையில் தமிழ் செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும்இ அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம்; 380 வருட பாரம்பரியம் கொண்டது. நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமை இதற்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும்இ அங்கீகாரமும் உண்டு. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன்இ தமிழ் ஆய்வின் தரத்தையும்இ வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

‘நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்தவேண்டும். பொருள்செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ் இருக்கை வடிகாலாக அமையும். அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்னவென்றால் தமிழின் பெருமை பாதியளவுகூட வெளியே வரவில்லை. மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும்போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது’ இப்படி கூறுகிறர் ஜொனாதன் ரிப்ளே.

Support Harvard Tamil Chair

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு தமிழ் நாட்டில் ஆதரவு பெருகி வருவது மகிழ்ச்சியான செய்தி. தி இந்து பத்திரிகை தொடர்ந்து இது பற்றி கட்டுரை எழுதி வருவதுடன் கொடையாளர்களின் பெயர்களை பத்திரிகையில் பிரசுரித்து அவர்களை ஊக்குவிக்கிறது. நடிகர் சிவக்குமார் காணொளிமூலம் செய்தி பரப்பி வருகிறார். பிரபல வானொலி ஒலிபரப்பாளரும்இ தொகுப்பாளரும்இ நடிகருமான அப்துல் ஹமீத் காணொளிமூலம் பரப்புரை செய்கிறார். கவிஞர் பழநிபாரதி இயற்றிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலுக்குஇ ஏ.ஆர்இரஹ்மானின் உதவியாளர் தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். பாடலை சீர்காழி சிவசிதம்பரமும்இ நித்தியஸ்ரீயும் பாடியிருக்கிறார்கள். கவிஞர் நா.முத்துக்குமார் வாழ்த்து அனுப்பியதுடன் கனிசமான தொகையும் கொடுத்திருக்கிறார். கவிஞர் தாமரை வாழ்த்துக் கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான்.

‘அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் ‘தமிழ் இருக்கை’ பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன்.

முதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம்இ ‘ தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை ? ‘ என்பதுதான்……..

என் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப் பணியை சிரமேற் கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எங்கள் குடும்பத்தின் பெயரால் நாங்கள் அளிக்கும் சிறு தொகையான ரூ ஒரு இலட்சத்தைப் ( 1,00,000/- ) பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என் ரசிகர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த செய்தியை நீங்கள் எந்த விதத்திலும் உலகத் தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்தி விரைவில் வந்து காதில் தேன் பாய்ச்சக் காத்திருக்கிறேன்.’

கவிஞர் தாமரை ஒருவித தயக்கமும் இன்றி பொருளுதவி புரிந்தார். ஆனால் நிதி சேர்க்கும்போது அநேகர் கேட்கும் கேள்வி இதுதான். ‘அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக் கழகத் தமிழ் இருக்கைக்கு இங்கேயிருந்து நாம் ஏன் பணம் கொடுக்கவேண்டும்?’ உண்மையில் அமெரிக்காவில் வாழும் சில வள்ளல்கள் ஒன்று சேர்ந்து தமிழ் இருக்கையை உருவாக்கமுடியும். அதில் என்ன பெருமை இருக்கிறது? உலகத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது. இந்த இருக்கை உலகத் தமிழர்களுக்கு சொந்தமாக இருப்பதில்தான் அதன் பெருமை வெளிப்படும்.

முதல்வர் ஜெயலலிதா தன் தேர்தல் அறிக்கையில் இப்படி அறிவித்திருக்கிறார். ‘தமிழ் மொழியின் சிறப்பை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை ஏற்படுத்தப்படும்.’ அது சும்மா தேர்தலுக்காக சொன்ன வார்த்தை இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். வெகுவிரைவில் ஹார்வார்ட் இருக்கைக்கு பலமான ஆதரவு தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கும் என்பதுதான் உலகத் தமிழர்கலீன் எதிர்பார்ப்பு.

தமிழ் நாட்டு கிராமம் ஒன்றிலிருந்து ஒரு பெண்மணி ரூபா 250 ( 5 டொலர்) ஹார்வார்ட் நிதிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு கணவர் இல்லை. இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்கிறார். இந்தப் பணத்தை எப்படியும் சேர்த்துவிடவேண்டும் என்று இன்னொருவரைப் பிடித்து பணத்தை அவர் மூலம் அனுப்பிவைத்தார். இவர்களால்தான் ஹார்வார்ட் தமிழ் இருக்கை உருவாகிறது. இவருடைய 5 டொலர் ஐந்து லட்சம் டொலர்களுக்கு சமானம்.

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நிதி வழங்குவது எளிமையாக்கப் பட்டிருக்கிறது.

Harvardtamilchair.com எனும் இணையதளத்திற்குச் சென்று அதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளில் பணத்தை அனுப்பலாம். கடன் அட்டை வழியாகவோ, காசோலையாகவோ நேரடியாக பணத்தை செலுத்தலாம். Crowd funding எனும் இலகு வழியும் இருக்கிறது. https://www.generosity.com/community-fundraising/harvard-university-sangam-tamil-chair இந்த லிங்கிலே சென்று ஒரு நிமிடத்திலே பணத்தை கடன் அட்டைமூலம் செலுத்திவிட முடியும். ரசீதும் உடனேயே கிடைக்கும். அனைத்துலக தமிழ் மக்களுக்கு சொந்தமாக இந்த தமிழ் இருக்கை அமையும். அதுதான் அதன் பெருமை.

இந்தக் கட்டுரையை முடிக்கும்போது கவிஞர் தாமரையின் பாடல் வரிகளைக் கடன் வாங்கி நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன்.

‘தமிழர்களே வருக
தமிழ் இருக்கை தருக’.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *