Search
Friday 22 November 2019
  • :
  • :

தொற்றுநோய்களும் தடுப்பு முறைகளும்: நீங்கள் அவசியம் அறிந்திருக்கவேண்டியவை

தொற்றுநோய்களும் தடுப்பு முறைகளும்: நீங்கள் அவசியம் அறிந்திருக்கவேண்டியவை

மருத்துவர் சி யமுனாநந்தா 

தொற்றுநோய்கள் வராது தடுக்கும் முறைகளில் முதன்மையானது தடுப்பு மருந்து ஏற்றல் ஆகும். இதனால் உடலில் நிர்ப்பீடணம் ஏற்படுகின்றது. அம்மை நோய் உலகிலிருந்து இல்லாது போக (Small pox) நோய் தடுப்பு ஏற்றல் முறைமையே கைகொடுத்தது. அதேபோல போலியோ நோயினையும் உலகில் இருந்து இல்லாது செய்ய தடுப்பு மருந்தேற்றல் கைகொடுக்கின்றது.

தொற்றுநோய் பரவல் ஒரு நோய் முதலில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒருவரிலிருந்து இன்னொருவருக்குப் பரவலாம். பொதுத் தொற்றுக் காவியால் பரவலாம். தொற்றுநோய் பரவும் நிலையினை (Epidemic) நோய் விரகல் என அழைப்பர். உலகம் முழுவதும் தொற்றுநோய் பரவலை (Pandemic ) பார்விரகல் என அழைப்பர்.

தொற்றுநோய்களுக்கு உரிய சிகிச்சையினை அளிப்பதால் தொற்றுநோய்கள் பரவாது கட்டுப்படுத்தலாம். இதற்கு உரிய நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மிகவும் முக்கியமானவை. பக்றீரியாத் தொற்றுக்களில் காசநோயும், வைரசுத் தொற்றுக்களில் எயிட்ஸ் நோயும் உலகில் தொடர் சவாலாக உள்ளது. இது தவிர உலகில் அவ்வப்போது பல வைரசுத் தொற்றுக்கள் குறிப்பாக சுவாசம் மூலமும், நுளம்புகளின் மூலமும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. எனவே தொற்றுநோய் பற்றிய அடிப்படை விளக்கங்கள் அனைவருக்கும் இன்றியமையாதது ஆகும்.

Streptococcus

பாடசாலை ஆசிரியர்களுக்கான தொற்று நோய் விளக்கங்கள்
A. பாடசாலை ஆசிரியர்களுக்கு தொற்றுநோய் தொடர்பான விழிப்பின் அவசியம் யாது?
1) மாணவர்களுக்கு விழிப்பினை ஏற்படுத்துவதற்கு.
2) பாடசாலைச் சூழலில் நோய் பரவாமல் தடுப்பதற்கு.
3) தொற்றுநோய் தொடர்பாக கல்வி புகட்டுவதற்கு.
4) சமூகத்தில் தொற்றுநோய் பரவாது பாதுகாப்பதற்கு.
5) பாடசாலைச் சுகாதாரக் கழகங்களின் செயற்பாட்டினை ஊக்குவிப்பதற்கு.

B. தொற்றுநோயினை ஏற்படுத்தும் காரணிகள் யாவை?
1) ஃபிரியோன்கள் (Prions)
2) வைரசுக்கள்
3) பக்றீரியாக்கள்
4) எயுக்கரியோட்டா ((Eukaryotes)

C. தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை?
1) ஒருவரின் உடலின் ஒருபகுதியில் இருந்து உடலின் இன்னொரு பகுதிக்கு பரவல் (Endogenous)
2) காற்றால் பரவல்.
3) உணவுக்கால்வாய் மூலமான தொற்று ( Faeco oral)
4) காவிகளால் பரவல்.
5) ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நேரடியாகப் பரவல்.
6) ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு மறைமுகமாகப் பரவல்.
7) நேரடியாக உட்செலுத்துதல். (Direct inoculation)
8) பாதிக்கப்பட்ட பகுதிகளை உண்ணல்.

D. தொற்றுநோய் தடுப்பினையும் தொற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்தலையும் எவ்வாறு மேற்கொள்ளலாம்?
1) நோய்தொற்றலைத் தடுக்கும் முறைகளைக் கைக்கொள்ளல் (Infection Control Measures)
2) நேய் முதலை இல்லாது செய்தல் (Eradication of reservoir)
3) சிகிச்சை அளித்தலும் நிர்ப்பீடணம் வழங்குதலும் (Treatment and Immunization)

E. தொற்றுநோய் பரவும் விதத்தினை அடிப்படையாகக் கொண்டு தொற்றுநோய்களை எவ்வாறு வகைப்படுத்தலாம்?
1) பூச்சிகளினால் பரவும் நோய்கள்.
2) உணவினால் பரவும் நோய்கள்.
3) குருதியினால் பரவும் தொற்று நோய்கள்.
4) காற்றால் பரவும் தொற்று நோய்கள்.
5) நேரடித் தொடுகையினால் பரவும் தொற்று நோய்கள்.

F. பொதுவான வைரசுத் தொற்றுக்கள் எவை?

1) சுவாசத் தொகுதியை பாதிக்கும் தொற்று
தடிமன் – Rhino virus ஆல் ஏற்படும்.
சளிச்சுரம் – Influenza virus ஆல் ஏற்படும்.
சின்னமுத்து – Measles ஆல் ஏற்படும்.

2) தோலைத் தாக்கும் வைரசுத் தொற்று
i) ஹேப்பிஸ் வரைசு (Herbes)
ii) வாரிசெல்லா (Varicella)
iii) சின்னமுத்து, சின்னம்மை (Measles)
iv) ரூபெல்லா (Rubella)

3) உடல் முழுவதனையும் பாதிக்கும் வைரசுத் தொற்றுக்கள்
i) டெங்கு (Dengue)
ii) கூகைக்கட்டு (Mumps)
iii) எயிட்ஸ் (HIV)

4) நரம்புத் தொகுதியைத் தாக்கும் வைரசுத் தொற்று
போலியோ (Polio) (கட்டுப்படுத்தப்பட்டு விட்டது)

5) உணவுக் கால்வாய்த் தொகுதியைத் தாக்கும் வைரசுத் தொற்று
Viral Hepatitis

G. பொதுவான பக்றீரியாத் தொற்றுக்கள் எவை?
1) தோலில் ஏற்படும் பக்றீரியாத் தொற்றல்.
தொழுநோய் – Leprosy
ஸ்ரைபலோ கொக்கஸ் – Staphylococcus

2) சுவாசத் தொகுதியினைத் தாக்கும் பக்றீரியாத் தொற்றுக்கள் எவை?
தொண்டையழர்ச்சி
மூக்கு மென்சவ்வழற்சி
சுவாசப்பை அழற்சி
காச நோய்.

3) உணவுக் கால்வாயினைத் தாக்கும் பக்றீரியாத் தொற்றுக்கள் எவை?
உணவு பழுதடைதல்
நெருப்புக் காய்ச்சல்.
வயிற்றோட்டம்
வயிற்றுழைவு
குடல் வளரி அழற்சி (Appendix)

4) நரம்புத் தொகுதியினைத் தாக்கும் பக்றீரியா?
மூளை மென்சவ்வு அழற்சி

5) சிறுநீரகத் தொகுதியினைத் தாக்கும் பக்றீரியா?
சிறுநீரகத் தொற்று.

H. பொதுவான பங்கசுத் தொற்றுக்கள் யாவை?
i) தேமல்
ii) வட்டக்கடி ((Taenia)
iii) வெள்ளைபடுதல் (Candidasis)

I. பொதுவான ஒருகலத் தொற்றுக்கள் (Protozoa) எவை?
i) அமீபா ((Amoebiasis)
ii) மலேரியா ((Malaria) (கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

J. பொதுவான ஹெல்ந்திரிக் ((Helmithic) தொற்றுக்கள்
i) வட்டப்புழு (Round worm)
ii) நாடாப்புழு (Tape worm)
iii) கொழுக்கிப்புழு ((Hook worm)
iv) யானைக்கால் நோய் ((Filariasis) (கட்டுப்படுத்தப்பட்ட ஹெல்ந்திரிக் தொற்று.)

infec-page-001


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *