செய்திகள்

கணவனை கட்டிப்போட்டு 66 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குற்படுத்திய நண்பர்கள் : ருவான்வெலவில் சம்பவம்

கணவனை கட்டிப்போட்டு 66 வயது பெண்ணை பாலியல் வல்லுறவுக்குற்படுத்திய இரண்டு போர் ருவான்வெல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலப்பிட்டமட பல்பம்பொல பகுதியில் நண்பரொருவரின் வீட்டுக்கு சென்ற குறித்த இருவரும் அங்கு அவருடன் கசிப்பு அருந்திவிட்டு அவரை மரமொன்றில் கட்டிப்போட்டுவிட்டு அவரின் மனைவியிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளனர். இதன்போது அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் அவர் இறந்துவிட்டார் என நினைத்து அவர்கள் இருவரும் மரத்தில் கட்டப்பட்டிருந்த கணவனை அவிழ்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ருவான்வெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 n10