செய்திகள்

கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கோடரியுடன் பொலிசில் சரண்: வவுனியாவில் சம்பவம்

வவுனியாவில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி ஒருவர் கோடரியுடன் பொலிஸில் சரணடைந்த சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

வவுனியா, அவுரந்துலாவ, புபுதுகம பிரதேசத்திலேயே குறித்த சம்பம் இடம்பெற்றுள்ளது. 43 வயதான எஸ்.எஸ்.திசாநாயக்க என்ற நபரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தினமும் வீட்டிற்கு மதுபோதையில் வந்து மனைவியுடன் சண்டையிடுவதாகவும், குறித்த தினமும் இவ்வாறு மது போதையில் சண்டையிடும் போதே இந்த அனர்த்தம் நடந்திருக்கலாம் எனவும் பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதில விசாரணைகளை வவுனியா, ஈரப்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்’டு வருகிறார்கள்.

N5