செய்திகள்

கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு மக்கள் கிளிநொச்சியில் திரண்டு கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேசசெயலர் பிரிவில் உள்ள கிராமங்களான நாதன்குடியிருப்பு உழவனூர் மற்றும் புதிய புன்னைநீராவி ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் காணி அனுமதிப்பத்திரம் இதுரை வழங்கப்படவில்லை.இந்தக்கிராமங்களில் இவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றனர்.மத்திய வகுப்பு திட்ட காணிகளில் வசித்துவரும் இவர்களுக்கு இதுவரை காணி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்காததால் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய வீட்டுத்திட்டம் மின்சாரம் மற்றும் வீதிவசதிகள் என்பனவும் அபிவிருத்தி திட்டங்களும் கிடைக்கமுடியாத அவலநிலை ஏற்ப்பட்டுள்ளது.எனவே இந்த மக்கள் தமது காணிப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தரக்கோரி இன்று கிளிநொச்சியில் பெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் இருந்து ஆரம்பித்து கிளிநொச்சி கச்சேரிக்கு சென்று அங்கு ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கொடுத்துள்ளதுடன் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் அலுவலகம் சென்று அங்கும் மகஜர்களை கையளித்துள்ளனர்.

DSC_0125இந்த மகஜரை பெற்றுக்கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் அங்கு மக்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்
கண்டாவளையின் உழவனூர் நாதன்திட்டம் புதியபுன்னைநீராவி உட்பட்ட எனைய கண்டாவளை பிரதேசமக்களின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் தொடர்பாக அறிந்துள்ளேன்.இவறிற்கு தீர்வு காணும் வகையில் வடமாகாண முதலமைச்சர் கட்சியின் தலைவர் இரா.சம்மந்தன் பா.உறுப்பினர் மாவை.சேனாதிராசா மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோருக்கு அறியத்தருவதுடன் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

SAM_8864SAM_8828SAM_8799SAM_8848