செய்திகள்

கதிர்காமத்தின் பஸ்நாயக்க நிலமேவாக பிரபல வர்த்தகர் பியதிஸ்ஸ குமாரகே தெரிவு

கதிர்காமம் ஆலயத்தின்  புதிய பஸ்நாயக்க நிலமேவாக கண்டியை சேர்ந்த பிரபல வர்த்தகரான தொன்.பியதிஸ்ஸ குமாரகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை மாவட்ட செயலகத்தில்  பஸ்நாயக்க நிலமேவுக்கான தேர்தல்  இன்று நடைபெற்றது.  அதன்போது டி.ஜே.குமாரகே  போட்டியின்றி  தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் குறித்த பதவியில்  ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ இருந்தமை குறிப்பிடத்தக்கது.