செய்திகள்

கதிர்காமத்தில் கஞ்சாவுடன் மூவர் கைது

கதிர்காமம் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, 40 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

செல்லக் கதிர்காமம், தபே பிரதேத்தில் நேற்றுக் காலை இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 200 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இவற்றை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட இரண்டு முச்சக்கர வண்டிகளும் இதன்போது மீட்கப்பட்டதாக கலால் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.