செய்திகள்

கந்தக்காட்டில் மேலும் 14 தொற்றாளர்கள்

கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி இந்த முகாமில் இதுவரையில் 480ற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் பணியாற்றும் அதிகாரியொருவரின் ஊடாக அனுராதபுரம் இராஜங்கனை பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்படும் நிலையில் அந்த பிரதேசத்தில் 1 , 3 மற்றும் 5ஆம் இலக்க பகுதிகளில் வெளியார் செல்வதற்கும் அங்குள்ளவர்கள் வெளியில் செல்வதற்கும் பயண தடை விதிக்கப்பட்டுள்ளது. -(3)