செய்திகள்

கனடாவில் பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள்

கனடாவின் உத்தேச பயங்கரவாத தடுப்புசட்டமூலத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.நாட்டின் பல பகுதிகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
டொரன்டோவின் நதன் பிலிப் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
மொன்றியோலில் பூங்கா ஓன்றில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பலர் குறிப்பிட்ட சட்ட முலத்திங்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பின்னர் லிபரல் கட்சியின் தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாக அவர்கள் சென்றுள்ளனர்.

vt--bill-c51-protest028jpg.jpg.size.xxxlarge.letterbox
உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் அரசாங்கம் ஆர்பாட்டத்தையும், மாற்றுக்கருத்துக்கள் ,விமர்சனங்களை கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் கொன்சவேர்டிவ் அரசாங்கம் ஜனவரியில் பாராளுமன்றத்தில் சமர்பித்துள்ள குறிப்பிட்ட சட்டமூலம் பொலிஸாருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சந்தேகநபர்களை தடுத்து வைப்பதற்கும்அதிகாரங்களை வழங்கும் அந்த சட்டமூலம் புலனாய்வு பிரிவினரையும் பலப்படுத்துகின்றது.
குறிப்பிட்ட சட்டமூலத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் இதன் மூலம் மக்களின் தனிமனித உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளனர்.
சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற அமைப்புகளும் குறிப்பிட்ட சட்டமூலத்தின் மூலம் வழங்கப்படுகின்ற அதிகாரங்களை குறைக்குமாறு கோரியுள்ளன.
ஓட்டாவாவில் நூற்றுக்கணக்கானவர்கள் பிரதமர் ஹாப்பரின் அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.அதன் பின்னர் பாராளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றுள்ளனர்.
வான்கூவரில் சுமார் 750 ற்கும்மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.பழங்குடி இனத்தலைவர்களும், மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களும் பொதுமக்களுடன் ஓலிபெருக்கி மூலம் உரையாடியுள்ளனர்.
குறிப்பிட்ட சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்படலாம் என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.