செய்திகள்

கனடாவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு – பெண் போலீசார் உள்பட 13 பேர் பலி

கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலர் ஆளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார்.இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 13 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 6க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டன. இதன்பின்னர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.போலீசாரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.(15)